“அரசியலில் எதுவும் நடக்கலாம்” - ராமதாஸ் பதில்

“அரசியலில் எதுவும் நடக்கலாம்” -  ராமதாஸ் பதில்

திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் , ‘ அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.  

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர்,   செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “பாமகவில் இரு அணி கிடையாது. என் தலைமையிலான அணி தான் பாமக. வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் விரும்பிய வெற்றியை பெறுவோம் என்றார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. பாமக செயல் தலைவர் காந்திமதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார்” என்று தெரிவித்தார்.

மேலும், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லோமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.