வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய அரசு ஊழியர் அல்லாத நபர்!
அரசு ஊழியர் அல்லாத நபர் பத்து ஆண்டுகளாக அரசு ஊழியர் போல் பணியாற்றியது எம்.எல்.ஏ ஆய்வின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் அரசு ஊழியர் அல்லாத நபர் ஒருவர் 10 ஆண்டுகளாக அரசு ஊழியர் போல் பணியாற்றி வந்துள்ளார். அப்போது , ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து, அதுகுறித்து அலுவலக மேலாளரிடம் விசாரித்தார்.
அரசு ஊழியராக நியமனம் இல்லாமல் அரசு அலுவலகத்தில் தனி நபர் பணியாற்றி வருவது குறித்து எம்எல்ஏ ரகுராமன் கேள்வி எழுப்பியபோது அலுவலக மேலாளர் மற்றும் பாண்டி ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
ஒன்றிய செயற்பொறியாளருக்கு உதவியாக பாண்டி பணிபுரிந்து வருவதாகவும், பொறியாளர்களே பாண்டிக்கு ஊதியம் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.