கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்: கார்கே
கோவாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட துயரகரமான தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். தவிர்க்கப்படக்கூடிய இந்த துயர சம்பவம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இது ஒரு விபத்து மட்டுமல்ல, இது ஒரு அரசாங்க தோல்வியும்கூட. வெளிப்படையான விசாரணை மூலம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.