மல்லையாவுக்கு விருந்து கொடுத்த லலித் மோடி

மல்லையாவுக்கு விருந்து கொடுத்த லலித் மோடி

இந்தியாவால் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, இந்தியாவால் தேடப்படும் இன்னொரு தொழிலதிபர் லலித் மோடி பிறந்தநாள் விருந்தளித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்பி செலுத்தாமல் லண்டனுக்கு மல்லையா தப்பிவிட்டார். இதையடுத்து அவரை இந்தியா தேடி வருகிறது. லண்டனில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

இதேபோல், இந்திய பிரிமியர் லீக்கின் முன்னாள் தலைவரான லலித் மோடியையும் இந்தியா தேடி வருகிறது. அவரும் லண்டனில்தான் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், விஜய் மல்லையா அண்மையில் தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவருக்கு லண்டனில் உள்ள தனது இல்லத்தில் வைத்து லலித் மோடி பிறந்தநாள் பார்ட்டி அளித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. இதையடுத்து 2 பேரையும் இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.