“ஆர்எஸ்எஸ்-க்கு வெளிநாட்டு நிதி வரவில்லை” - யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பகவத் கீதையின் உபதேசங்களை பரப்புவது தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது, நிதி எங்கிருந்து வருகிறது என வெளிநாட்டு தூதர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்புகின்றனர்.
இது தன்னார்வலர்களால் செயல்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து நிதி எதுவும் பெறப்படுவதில்லை. பொதுமக்களின் ஆதரவுடன் மட்டுமே செயல்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.