பிரதமர் மோடியுடன் ரேவந்த் ரெட்டி திடீர் சந்திப்பு.. ஏன் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்துப் பேசினார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் விரைவில் Telangana Rising 2047 Global Summit மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்தார். அப்போது ஹைதராபாத்தில் நடக்கவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது தெலுங்கானா துணை முதலமைச்சர் பாத்தி விக்ரமார்காவும் உடனிருந்தார்.