யுஜிசிக்கு மாற்றாக புது அமைப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா
நாட்டில் தற்போது உயர்கல்வித் துறையை ஒழுங்குப்படுத்தவும், கண்காணிக்கவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யுஜிசி உள்ளிட்ட உயர்கல்வி அமைப்புகளுக்கு பதிலாக புதிய அமைப்பை உருவாக்கும் வகையில் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் அனைத்து உயர்கல்விக்கும் ஒரே ஒரு ஒழங்கு அமைப்பாக இந்த இந்திய உயர்கல்வி ஆணையம் (எச்இசிஐ) செயல்படும். உயர்கல்வியை ஒழுங்குபடுத்துதல், அங்கீகாரம் அளித்தல், தொழில்முறை தரத்தை நிலைப்படுத்துதல் ஆகிய 3 பங்கை இந்த அமைப்பு வகிக்கும்.