இன்று இந்தியா vs நியூசிலாந்து இரண்டாவது T20 போட்டி.. முக்கிய வீரர் விலகல்..

இன்று இந்தியா vs நியூசிலாந்து இரண்டாவது T20 போட்டி.. முக்கிய வீரர் விலகல்..
இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களை வென்று சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து தற்போது 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடி வருகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் இல்லாத நிலையில் இது சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. முன்னிலையை தக்க வைக்க இந்தியாவும் தொடரை சமன் செய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.