தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
கடந்த மூன்று நாட்களாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கும், சவரன் ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.12,070-க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாதத்தின் முதல் நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருக்கிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.2) கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 குறைந்து ஒரு கிராம் ரூ.13,134-க்கும், சவரனுக்கு ரூ. 264 குறைந்து ரூ.1,05,072-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் 6 நாட்கள் தங்கத்தின் விலை அதிகரித்தும், 3 நாட்கள் தங்கம் விலை குறைந்தும் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஏறிவந்த வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 1 கிராம் ரூ.196-க்கும், கிலோ ரூ.1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வரும் நிலையில், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.12,040
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.96,320
வெள்ளி 1 கிராம் - ரூ.196
வெள்ளி 1 கிலோ - ரூ.1,96,000
கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை
| தேதி | கிராம் விலை | சவரன் விலை |
| டிசம்பர் 2 | ரூ.12,040 | ரூ.96,320 |
| டிசம்பர் 1 | ரூ.12,070 | ரூ.96,560 |
| நவம்பர் 30 | ரூ.11,980 | ரூ.95,840 |
| நவம்பர் 29 | ரூ.11,980 | ரூ.95,840 |
| நவம்பர் 28 | ரூ.11,840 | ரூ.94,720 |
| நவம்பர் 27 | ரூ.11,770 | ரூ.94,160 |
| நவம்பர் 26 | ரூ.11,800 | ரூ.94,400 |
| நவம்பர் 25 | ரூ.11,720 | ரூ.93,760 |
| நவம்பர் 24 | ரூ.11,520 | ரூ.92,160 |
| நவம்பர் 23 | ரூ.11,630 | ரூ.93,040 |
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் சரிவு, தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.