ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்: சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2400 உயர்வு

சென்னையில் இன்று (அக் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (அக் 15) ஆபரண தங்கம் கிராம், 11,860 ரூபாய்க்கும், சவரன், 94,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 16), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 11,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய்க்கு அதிகரித்து, 95,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.12 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2400 அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.