தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா

இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி ராஞ்​சி​யில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது.

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளையாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை தென் ஆப்​பிரிக்க அணி முழு​மை​யாக 2-0 என கைப்​பற்​றியது.

இதன் மூலம் 25 ஆண்​டு​களுக்கு பிறகு இந்​திய அணி​யில் முழு​மை​யாக டெஸ்ட் தொடரை வென்று அந்த அணி சாதனை படைத்​திருந்​தது. இந்​நிலை​யில் டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணி​களும் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் மோத உள்​ளன.

இதன் முதல் ஒரு​நாள் போட்டி ராஞ்​சி​யில் உள்ள ஜேஎஸ்​சிஏ சர்​வ​தேச மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. டெஸ்ட் தொடரை இழந்​துள்ள இந்​திய அணி ஒரு​நாள் போட்​டித் தொடரில் வெற்றிகளை குவிக்க வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்கு​கிறது.

மேலும் 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்​பையை கருத்​தில் கொண்டு தற்​போதைய தென் ஆப்​பிரிக்க தொடர் சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமைந்​துள்​ளது.

ஷுப்​மன் கில் காயம் காரண​மாக தொடரில் இருந்து வில​கி​யுள்​ள​தால் கே.எல்​.​ராகுல் தலை​மை​யில் இந்​திய அணி களமிறங்​கு​கிறது. ஒரு​நாள் போட்​டித் தொடரில் ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், ஸ்ரேயஸ் ஐயரும் காயம் காரண​மாக விளையாட​வில்​லை. இவர்​கள் இல்​லாதது அணியை பலவீனப்படுத்​து​வது மட்​டுமல்​லாமல், தற்​காலிக கேப்​டன் கே.எல்​.​ராகுல் மற்​றும் தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் ஆகியோர் தங்​கள் பணி​களை கூடு​தல் பொறுப்​புடன் மேற்​கொள்ள வேண்டிய கட்​டா​யத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர்.