துப்பாக்கியால் சுட்டு மிரட்டல்: ஈரோடு அதிமுக நிர்வாகி கைது

துப்பாக்கியால் சுட்டு மிரட்டல்: ஈரோடு அதிமுக நிர்வாகி கைது

 ஈரோடு மாவட்​டம் கோபி அடுத்த ஆண்​ட​வர்​மலையை சேர்ந்​தவர் கோபி​நாத் (45). விவ​சா​யி. அதி​முக மாவட்ட மாணவரணி இணைச் செய​லா​ள​ராக பொறுப்பு வகிக்​கிறார்.

கோபி​நாத்​துக்​கும், அவரது மைத்​துனர் தினேஷ்கு​மாருக்​கும் (28) பணம் கொடுக்​கல் வாங்​கல் தொடர்​பாக பிரச்​சினை இருந்​துள்​ளது. இந்​நிலை​யில், கோபி​நாத் அடிக்​கடி மது அருந்​தி​விட்டு வந்​து, மனைவி பிருந்​தா​விடம் பிரச்​சினை செய்​தா​ராம்.

இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி இரவு கோபி​நாத் மது அருந்​தி​விட்டு வந்​து, மனைவி பிருந்​தாவை அடித்​துள்​ளார். இதையறிந்த மாம​னார் வேலு​சாமி, மைத்​துனர் தினேஷ் கு​மார் ஆகியோர் கோபி​நாத் வீட்​டுக்கு வந்​து, பிருந்​தாவை தாக்​கியது குறித்து விசா​ரித்​துள்​ளனர். அப்​போது, இரு தரப்​பினரிடையே கைகலப்பு ஏற்​பட்​டுள்​ளது.

இதில் ஆத்​திரமடைந்த கோபி​நாத் துப்​பாக்​கியை எடுத்து வந்​துள்​ளார். அப்​போது பிருந்​தா, தனது தந்தை வேலு​சாமி, தம்பி தினேஷ்கு​மார் ஆகியோரை அரு​கில் உள்ள வீட்​டுக்​குள் வைத்து பூட்​டி​விட்​டார். துப்​பாக்​கி​யுடன் வீட்​டில் இருந்து வெளியே வந்த கோபி​நாத், வானத்தை நோக்கி 3 முறை சுட்டு மிரட்​டியதுடன், மாமானர் குடும்​பத்​தினர் வந்த காரை தாக்கி சேதப்​படுத்​தி​யுள்ளார்.