“புதுச்சேரியிலும் திமுக ஆட்சி மலரும்” - ஜெகத்ரட்சகன் உறுதி
“திமுக ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும்” என்று திமுக எம்பி-யான ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெத்ரட்சகன் எம்.பி., கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-வினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி நூற்றுக்கு இருநூறு சதவீதம் அமையும். ஆனால் அந்த ஆட்சி திமுக தலைமையில் இருக்குமா என்பதை எங்கள் தலைவர் முடிவெடுப்பார். நான் புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் இல்லை. என்னை இங்கு கட்சி வேலைக்காக மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறது தலைமை. நான் என்னுடைய பணியைச் செய்கிறேன். அவ்வளவே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை மத்திய அரசே தெரிவித்துள்ளது. இந்த ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். நிச்சயம் இங்கு திமுக ஆட்சி மலரும். எங்களுக்கு ஆக்கபூர்வமாகப் பேசித்தான் பழக்கம். வெறுமனே அரசியல் பேசுவது வீண். விஜய் வெற்று அரசியல் பேசுகிறார்” என்று சொன்னார்.