மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 நவம்பர் 2025

மேஷம்: திட்டமிட்ட பணியை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.

சிம்மம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்.

கன்னி: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

துலாம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும்.

விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். ஊர் விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் ரசனையை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு.

தனுசு: பழைய சொத்து வழக்குகளை பேசித் தீர்ப்பீர். பணவரவால் நிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்படுவீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி பணிவார்.

மகரம்: திட்டமிடப்பட்டு, முடியாமலிருந்த பணிகள் முடியும். தந்தையாருடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க பழகிக் கொள்வது நல்லது.

கும்பம்: விவாதங்களை தவிர்க்கவும். மனக்குழப்பம் நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பதவிக்கு பரிந்துரைப்பார்.

மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்.