ஆவடியில் ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது
ஆவடி அருகே கொள்ளு மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக் குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் ஆவடி கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த ரவுடி வீரா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக் கிழமை இரவு ஆவடி கோவில் பதாகை உள்ள டாஸ்மாக் கடை அருகில் மணிகண்ட னுக்கும், வீராவுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற் பட்டது. அப்போது அங்குள்ள அண்ணா தெருவில் மணிகண்டனை கீழே தள்ளி விட்டு, வீரா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் மணிகண்டன் உடலைமீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் போலீஸார் கொலை வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த ரவுடிகள் வீரா (23), பிரதீஷ், (22), அபித் ராஜ் (20), சக்திவேல் (21) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.