ஒரே இரவில் 10 டன் இரும்பு பாலம் திருட்டு: சத்தீஸ்கரில் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 5 பேர் கைது

ஒரே இரவில் 10 டன் இரும்பு பாலம் திருட்டு: சத்தீஸ்கரில் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 5 பேர் கைது

சத்​தீஸ்​கர் மாநிலம் கோர்பா நகரின் தோதி​பா​ரா, 17-வது வார்டு பகு​தி​யில் ஹஸ்​தியோ இடது கால்​வாய் செல்​கிறது. இந்த கால்​வாய் மீது 40 ஆண்​டு​களுக்கு முன் 5 அடி அகல​மும் சுமார் 70 அடி நீள​மும் கொண்ட இரும்பு பாலம் கட்​டப்​பட்​டது. இந்த இரும்பு பாலம் 10 டன்​னுக்கு மேல் எடை கொண்​டது.

கடந்த 18-ம் தேதி காலையில் வழக்​கம்​போல் எழுந்த அப்​பகுதி மக்கள் பாலத்தை காணா​மல் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கவுன்​சிலர் லட்​சுமண் னி​வாஸ் அளித்த புகாரின் பேரில் சவுக்கி பகுதி போலீ​ஸார் சிறப்பு படை அமைத்து விசா​ரணை நடத்​தினர்.

இந்த வழக்​கில் 15 பேரை போலீ​ஸார் அடை​யாளம் கண்​டுள்​ளனர். இவர்​களில் 5 பேரை கைது செய்​துள்​ளனர். தலைமறை​வாக உள்ள 10 பேரை தேடி வரு​கின்​றனர். விசா​ரணை​யில் பழைய இரும்பு விலைக்கு விற்க பாலத்தை திருடிய​தாக ஒப்​புக் கொண்​டுள்​ளனர்.

காவல் நிலைய அதி​காரி பீம்​சென் யாதவ் கூறுகை​யில், “கால்​வாய்க்​குள் மறைத்து வைத்​திருந்த சுமார் 7 டன் இரும்பை பறி​முதல் செய்துள்​ளோம். இரும்பை கொண்டு செல்​லப் பயன்​படுத்​தப்​பட்ட வாக​னம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள இரும்பு எங்கு விற்​கப்​பட்​டது என்​று வி​சா​ரிக்​கிறோம்​’’ என்​றார்​.