டிரேடிங்கில் அதிக லாபம் எனக் கூறி மோசடி? விசாரணை வளையத்தில் பாஜக பெண் நிர்வாகி மதிவதனகிரி
டிரேடிங்கில் அதிக லாபம் பார்க்கலாம் என பணத்தை வாங்கி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் பாஜக மாநில பெண் நிர்வாகி மதிவதனகிரி கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பாஜகவில் மாநில மகளிரணி துணை தலைவராகச் செயல்பட்டு வருபவர் மதிவதனகிரி. இவர், டிரேடிங்கில் அதிக லாபம் பார்க்கலாம் எனக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ரூபாய் 4.5 கோடி அளவுக்கு பலரிடம் பணம் பெற்றுவிட்டு, லாபத்தை திருமப்த் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ,மதிவதனகிரியை தேடி வந்தனர். விசாரணையில் , அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர், கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார். அவரைக் கைது செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணைக்கு பின் , மதிவதனகிரி விடுவிக்கப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.