காவல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு விருது... முதல்வரிடம் இருந்து வந்த அசத்தல் அறிவிப்பு!

இவ்விருதுகள் முதலமைச்சரால் குடியரசு தின விழா அல்லாத மற்றொரு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு விருது... முதல்வரிடம் இருந்து வந்த அசத்தல் அறிவிப்பு!
குடியரசு தினத்தையொட்டி, 44 காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை அறிவித்துள்ளார்.
மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவில் சிறந்தவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா பத்து கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விருதுகள் முதலமைச்சரால் குடியரசு தின விழா அல்லாத மற்றொரு விழாவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.