பாமக நிறுவனருக்கு ஆஞ்சியோ பரிசோதனை - ஓடிவந்து நலம் விசாரித்த மகன் அன்புமணி!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இருதய அடைப்பிற்கான ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தந்தையைக் காண மருத்துவமனை வந்த அவர், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் ராமதாஸின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நேற்றைய தினம் தந்தை ராமதாஸ் இதயம் தொடர்பான பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் ரத்த குழாய்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.