'டிட்வா' புயல்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? - வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.
வடக்கு -வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
இது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னையின் தென்கிழக்கு பகுதியில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வருகிறது.டிட்வா புயல் அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகரும். இந்த புயலுக்கு ஏமன் பரிந்துரைத்த டித்வா என்ற பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ள
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மறுதினமும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் நாளை மறுதினம் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் நாளை மறுதினம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
இந்நிலையில், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூருக்கு. நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று இரவு அல்லது நாளை காலை கனமழையை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது