‘‘விமான விபத்து குறித்து விசாரணை’’ - அஜித் பவாரின் மறைவை அடுத்து ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்புக்குக் காரணமான விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிர அரசியலில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அஜித் பவாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர், தெளிவாகவும், சரளமாகவும் பேசக்கூடியவர். திறமையும் கடின உழைப்பும் கொண்டவர். நேர்மை மற்றம் அர்ப்பணிப்புமிக்க தலைவர். பார்க்கலாம்... யோசிக்கலாம்... போன்ற வார்த்தைகள் அவரது அகராதியில் கிடையாது.
அவர் எதற்காகவும் காத்திருக்க மாட்டார். எதைச் செய்ய விரும்பினாலும் அதை உடனடியாகச் செய்வார். தவறான திட்டம் என கருதினால், அதற்கு ‘நோ’ சொல்ல அவர் என்றும் தயங்கியது இல்லை. அதேநேரத்தில், மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாக தொடங்கினோம். அதில், அவர் முக்கிய பங்கு வகித்தார்.