அதிமுக விருப்ப மனு: கால அவகாசம் நீட்டிப்பு

அதிமுக விருப்ப மனு: கால அவகாசம் நீட்டிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31ம் தேதி புதன் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான படிவங்களை பெறலாம்.

அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.