அசைவம் சாப்பிட்ட பிறகு வீட்டில் விளக்கேற்றலாமா?
வீட்டில் யாரெல்லாம் விளக்கேற்றால் என்பது பற்றிய சந்தேகமும் பலருக்கும் உள்ளது. அசைவம் சாப்பிட்ட பிறகு என்ன செய்து விட்டு விளக்கேற்றலாம்? விளக்கேற்றுவது பற்றி இருக்கும் பல விதமான சந்தேகங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடுவதை காரணமாக காட்டி விளக்கேற்றாமல் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் தெளிவை தரும்.
தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது விளக்கேற்றுவது. இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் உள்ளதாலும், மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும் விளக்கேற்றுவது மிகவும் அவசியமாகும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் கெட்ட சக்திகள் எதுவும் வீட்டில் தங்காது. அதோடு தெய்வீக சக்திகள், நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் நிறைந்திருக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி ஏற்றப்படும் விளக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே போது வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஆகிய விட்டாலோ அந்த நாட்களில் வீட்டில் விளக்கேற்ற மாட்டார்கள். வீட்டின் பூஜை அறையை பூட்டி வைத்து விடுவார்கள். இது முற்றிலும் தவறானது என்பதே ஆன்மிக சான்றோர்கள் சொல்லும் கருத்தாகும். குடியிருக்கும் வீட்டில் எந்த காரணத்திற்காகவும் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது என்றே நம்முடைய சமயம் சொல்கிறது.
அசைவம் சாப்பிடும் நாட்களிலும் விளக்கேற்றாமல் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அசைவம் சாப்பிட்டாலும், அதற்கு பிறகு குளித்து விட்டு, சுத்தமாக வந்து விளக்கேற்றலாம். வீட்டில் அசைவம் சாப்பிட்ட பிறகு விளக்கு ஏற்றுவது தவறு என்றால், அதே வீட்டில் தான் அசைவம் சமைக்கப்படுகிறது. அப்போது கடவுளுக்கு தோஷம் ஏற்படாதா? அதனால் ஏதேதோ காரணங்களை சொல்லி வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருப்பது தான் தவறு. அசைவம் உணவுகள் சாப்பிடுபவர்கள் காலையில் குளித்து விட்டு விளக்கேற்றி விட்டு, மாலையில் விளக்கேற்றுவதற்கு முன்பு மீண்டும் குளித்து விட்டு விளக்கேற்றலாம்.