நடுங்க வைத்த ஆஸி., துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

நடுங்க வைத்த ஆஸி., துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நேற்று (டிச.14) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தந்தை - மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலேயாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை, எப்போதுமே மக்கள் அதிகம் கூடும் பகுதி ஆகும். அதிலும், நேற்று ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கடல் திருவிழாவான 'சானுக்கா' கொண்டாட்டங்கள் நடைபெற்றதால், ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் கூடி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த 2 பேர், திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினர். துப்பாக்கி சத்தத்தை கேட்டதும், அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என நேற்று வரை 9 பேர் வரை உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.