“வயது ஏற ஏற...” - சமந்தா சொன்ன சீக்ரெட்!
நடிகை சமந்தா எந்தளவுக்கு ஃபிட்னெஸ் பிரியர் என தனியாக சொல்ல வேண்டியதில்லை. யோகா, ஜிம், நீச்சல் என எல்லாவகை உடற்பயிற்சிகளையும் செய்து ஃபிட்டாக இருப்பவர் சமந்தா. இந்நிலையில்தான் தன்னுடைய ஃபிட்னெஸின் அடுத்தகட்டமாக, ஒரு புஷ்-அப் வேரியேஷனை பகிர்ந்து தன் ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார் சமந்தா.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது செலிபிரிட்டிகள் ஒருவருக்கொருவர் ஃபிட்னெஸ் சேலஞ்ச் செய்து கொள்வது வழக்கம். அந்தவகையில், தற்போது சமந்தா புஷ்-அப் சேலஞ்ச் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். அந்த சேலஞ்ச் வீடியோவின்படி சமந்தா புஷ்-அப் செய்வதில் உள்ள பல்வேறு வகை பயிற்சிகளை ஒன்றாக ஒரேநேரத்தில் செய்துள்ளார். உடலின் சமநிலை, கட்டுப்பாடு, வலிமை போன்றவற்றை வெளிப்படுத்தும் இந்த சேலஞ்ச், மேல் உடல் எந்த அளவிற்கு வலிமையோடு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
பொதுவாக புஷ்-அப் என்பது மார்பகங்கள், தோள்பட்டை, கை தசைகள், உடலின் அடிப்படை தசைகளை டார்கெட் செய்பவை. எந்தவகையான உபகரணமும் இல்லாமல், வலிமைக்கான பயிற்சியை செய்ய நினைப்பவர்களுக்கு இது சிறந்த சாய்ஸாக இருக்கும். புஷ்-அப் செய்வதன் மூலம், நம் வளர்சிதை மாற்றங்கள் மேம்படுவதுடன் உடலின் மேல்பாதி வலிமையடையும். உடலின் அடிப்படை தசைகள் வலிமை பெறுவதால், ரத்த ஓட்டம் மேம்பட்டு இதயநலன் பாதுகாக்கப்படும். மட்டுமன்றி மூட்டுக்கள், எலும்பு போன்றவையும் வலிமையடையும். மனநலன் மேம்பட்டு, கவனச்சிதறல் பிரச்சனையும் சரியாகும்.
சமீபத்தில் இயக்குநர் ராஜ் திருமணம் செய்த சமந்தா, கடந்த 2022-ல் தான் மயோசிடிஸ் எனப்படும் தசைவீக்கம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஏற்பட்டால் தசை பகுதிகள் முழுவதும் பலவீனமாகவும், சோர்வாகவும், வலியோடும் இருக்கும்.
மயோசிடிஸ் இருப்பவர்களுக்கு குறிப்பாக தோள்பட்டை, இடுப்பு, தொடை பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்படும். இருப்பினும் அதிலிருந்து மருத்துவர்கள் உதவியோடு மீண்டு வந்த சமந்தா, தற்போது தீவிரமான தசை பயிற்சிகளை செய்து தசை வலிமையை பெற்றுள்ளார். அதனால்தான் தற்போதுகூட அசத்தலாக பலவகை புஷ்-அப்களை செய்து அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
சமந்தா இந்த அளவிற்கு ஆக்டிவாக இருக்க, அவருடைய தீவிர உடற்பயிற்சியே காரணம். இதுபற்றி தன்னுடைய ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூறுகையில், “தசைகளை வலிமைப்படுத்துவது மிக மிக முக்கியம். அது தோற்றத்திற்காக மட்டுமல்ல, நாம் எப்படி வாழ்கிறோம் என்பதையும் நம் தசைகளே தீர்மானிக்கும். வயது ஏற ஏற நாம் வலிமைக்கான பயிற்சிகளை நம் நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். எனக்கு அப்பயிற்சிகள்தான் ஒழுக்கத்தையும், பொறுமையையும் கொடுத்தது” என்றுள்ளார்.