“ரோஹித் பாணியில் முதல் 6 ஓவர்களே குறி” - அபிஷேக் சர்மா பகிர்வு

“ரோஹித் பாணியில் முதல் 6 ஓவர்களே குறி” - அபிஷேக் சர்மா பகிர்வு

 டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் பவர் பிளே​வில் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா அமைத்து கொடுத்த அதிரடி பாணி​யையே பின்​பற்றி வரு​கிறேன் என தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் இளம் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை​யில் சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் அறி​முக​மா​னார். தனது அதிரடி மட்டை வீச்​சால் அவர், தற்​போது ஐசிசி தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்​ளார். இது​வரை 34 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 2 சதங்​கள், 7 அரை சதங்​களுடன 1,199 ரன்​களை குவித்​துள்​ளார். ஸ்டிரைக் ரேட் 190.92 ஆக உள்ளது.

நான் ரோஹித் சர்​மா​வின் அடிச்​சுவடு​களைப் பின்​பற்றி வரு​கிறேன், இந்த முறை​யில் விளை​யாடி இந்​தி​யா​வுக்​காக சிறப்​பாகச் செயல்​படு​வ​தில் நான் மிக​வும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இன்​னும் முழு​மை​யாக முதிர்ச்​சி​யடைந்​து​விட்​டேன் என்று சொல்ல மாட்​டேன், ஏனென்​றால் எப்​போதும் முன்​னேற இடம் உண்​டு.

ஆக்​ரோஷ​மான கிரிக்​கெட்டை விளை​யாடு​வதற்கு குறிப்​பிட்ட வழி​யில் பயிற்சி செய்ய வேண்​டும். போட்​டிகளுக்கு முன்பு நான் எப்​போதும் அதைத்​தான் செய்​வேன். எனக்கு ஒரு வாரம் அல்​லது 10 நாட்​கள் கிடைக்​கும்​போது, அடுத்த தொடர் அல்​லது போட்​டிகளில் நான் எதிர்​கொள்​ளும் பந்து வீச்​சாளர்​களை மனதில் கொள்​வேன். இவை அனைத்​தும் நான் அந்​தத் திட்​டங்​களை எவ்​வாறு செயல்​படுத்​துகிறேன் என்​ப​தைப் பொறுத்து அமை​யும்.

வலை பயிற்​சி​யில் மற்ற அணி​களில் உள்ள பந்து வீச்​சாளர்​களை போன்று வீசக்​கூடிய​வர்​களை வீசச் சொல்​வேன். மேலும் அவுட்​-ஸ்​விங்​கர்​கள், இன்​-ஸ்​விங்​கர்​களை வீசச் கூறி பேட்​டிங் செய்​வேன். மேலும் புதிய பந்​துகளை பயன்​படுத்​தக்​கூறு​வேன். உலகக் கோப்பை தொடரில் எனக்கு எதி​ராக அதி​கவேகத்​தில் பந்​து​வீச மாட்​டார்​கள். கடந்த சில போட்​டிகளில் நான் அதை உணர்ந்​தேன். அதனால் இந்த விஷ​யத்​தி​லும்​ பணி​யாற்​றி வரு​கிறேன்​. இவ்​வாறு அபிஷேக்​ சர்​மா கூறி​னார்.