பிக் பாஸில் சண்டைக்கு நடுவுல 'ரிசைன்' பண்ண VJ பார்வதி! வீட்டை விட்டு வெளியேற்றம்!

இந்த சீசன்ல பிக் பாஸ் வீடே ரெண்டாப் பிரிஞ்சிருக்கு. ஒருபக்கம் சகல வசதியோட 'டீலக்ஸ் ரூம்'; இன்னொரு பக்கம் சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்த 'சாதாரண ரூம்'. இப்போ டீலக்ஸ் ரூம்ல ஒரு புது டிராமா! வி.ஜே. பார்வதி வேலை செய்யுறத வச்சு, மாடல் அழகியான வியானா வம்பு இழுத்திருக்காங்க. பார்வதியோட வேலை செய்யுற விதம் வியானாவுக்குப் பிடிக்கல போல.
பார்வதி, "நான் எப்படி வேலை செய்யணும்னு நீங்க சொல்லக் கூடாது"ன்னு சொன்னதுக்கு, அங்க இருந்த இன்னொரு இன்ஸ்டா பிரபலம் ரம்யா ஜோவும் குரல் கொடுத்திருக்காங்க. "இதுக்கப்புறம் நீங்க பெருக்கும்போது எங்க வோல்ல இப்படிப் பண்ணாதீங்க. எங்களுக்குன்னு சுயமரியாதை இருக்கு!"ன்னு ரம்யா ஜோ சொன்னதைக் கேட்டதும், பார்வதிக்கு கோபம் தலைக்கேறியிருக்கு!
'சுயமரியாதை'ன்னா சண்டை, வேலைன்னா ரெசிக்னேஷன்... பிக் பாஸ் வீட்டுல இவங்க காட்டுற அலப்பறைகள் தாங்க முடியல. ஒருபக்கம் திவாகர் வந்து, "நான் தான் பெரிய படிப்பாளி"ன்னு பில்டப் கொடுத்துட்டு, அழுதுட்டு இருக்காரு. இன்னொரு பக்கம் பிரவீன் காந்த், "பெண்களுக்குப் பொறாமையும் பேராசையும் தான் அடிப்படை"ன்னு பொதுப்படையாப் பேசி மாட்டுறாரு. இப்போ வி.ஜே. பார்வதி "எனக்கு சுயமரியாதை இருக்கு"ன்னு சொல்லி, வேலையை விட்டுட்டுப் போறாரு!
இதெல்லாம் பார்க்கும்போது, எட்டு சீசன்களைப் பார்த்துட்டு, எப்படிக் கேம் ஆடணும்னு தெரிஞ்சே வந்த போட்டியாளர்கள், 'சண்டையும், கண்ணீரும், வெளிநடப்பும் தான் டி.ஆர்.பி-க்கு உதவும்'னு நினைச்சு நாடகம் போடுறாங்களோன்னு ரசிகர்கள் கடுப்பாயிருக்காங்க.
இது ஒரு என்டர்டெயின்மென்ட் ஷோவா, இல்லைன்னா ரியாலிட்டி ஷோவான்னு தெரியல. வேலை வாங்கினது பிடிக்கலைன்னா ராஜினாமா பண்றதுக்கு இது ஆபீஸ் கிடையாது. சண்டையும், பில்டப்பும், ஓவர் ரியாக்ஷனுமே கேம்னு நினைச்சு ஆடுற இந்த ஆட்டத்துக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்னு பார்ப்போம்!வி.ஜே. பார்வதியின் இந்த 'ரிசைன்மென்ட் டிராமா', சிம்பதி ஓட்டுக்கான உத்தியா இல்லைன்னா, உண்மையான கோபமா? நீங்க என்ன நினைக்கிறீங்க?