வீட்டில் பயன்படுத்தி வந்த பழைய விளக்கை மாற்றலாமா? இது தெரியாம எதுவும் செய்யாதீங்க...

வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள். பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும்.
ஒவ்வொரு பண்டிகையின் போது விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு விளக்குகளை பார்க்கும் பெண்களுக்கு நம் வீட்டில் எவ்வளவுதான் விளக்குகள் இருந்தாலும் அதனை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அதன்படி, புதிய விளக்குகளை வாங்கி பூஜை அறையில் வைத்து ஏற்றி வழிபடுவார்கள். இவ்வாறாக செய்வதால் நிறைய விளக்குகள் வீட்டில் இருக்கும். என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு...
நம் வீட்டில் இருக்கும் பழைய விளக்கைக் கொண்டு வழிபடுவது எவ்வளவு மங்களகரமானது என்பது தெரியுமா?. பழைய விளக்கை கொண்டு வழிபடுவதால் உங்கள் வீட்டின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
பழைய விளக்கை கொண்டு மீண்டும் மீண்டும் நாம் பிரார்த்தனை செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி படிப்படியாக குறைந்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். பழைய விளக்கை கொண்டு உங்கள் பூஜை அறையில் தினமும் பசுந்நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் உங்கள் தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது படும். இதனால் அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.