சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் பின் அக்பர் ஹுசைன், பெயர் வெளியிடப்படாத மற்றொரு சிங்கப்பூர் நபர், மலேசியாவைச் சேர்ந்த சாமிநாதன் செல்வராஜு ஆகிய மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். நாளை (புதன்கிழமை) நடைபெறும் விசாரணைக்கு முன்னதாக இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மிகவும் கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளது. 15 கிராம் ஹெராயின் அல்லது 500 கிராம் கஞ்சா போன்ற குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருட்களைக் கடத்துபவர்களுக்கு அங்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட சாமினாதன் கடந்த 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்த மரண தண்டனை பெரும்பாலும் கீழ்மட்ட கடத்தல்காரர்களை மட்டுமே தண்டிப்பதாகவும், முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க விடுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.