டிசம்பர் 1-ல் கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு நடுவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ, எக்ஸ் தள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அவர் அந்த பதிவில், டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் ஒரு ஆக்கப்பூர்வமான அமர்வை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.