சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? - புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர்

சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? - புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர்

அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி​யின் விருப்​பத்​துக்கு மாறாக சசிகலா, டி.டி.​வி.​தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்​கோட்​டையன் ஆகி​யோர் அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களை​யும் பிரிந்து சென்​றவர்​களை​யும் மீண்​டும் கட்​சிக்​குள் சேர்க்க வேண்​டும் என குரல் கொடுத்து வரு​கி​றார்​கள். ஆனால், கட்​சியை ஒருங்​கிணைக்க முயற்சி எடுப்​ப​தாகச் சொல்​லும் சசிகலா​வும் தினகரனுமே ஆளுக்​கொரு திசை​யில் பயணிக்​கி​றார்​கள்.

இதை உறு​திப்​படுத்​து​வது போல், அண்​மை​யில் பசும்​பொன்​னுக்கு அஞ்​சலி செலுத்த வந்த சசிகலாவை சந்​திப்​ப​தற்​கான வாய்ப்பு இருந்​தும் தினகரன் ஏனோ அதை தவிர்த்​தார். இத்​தனைக்​கும், ஓபிஎஸ்​ஸும் செங்​கோட்​டைய​னும் சசிகலா வரு​கைக்​காக காத்​திருந்து அவரைச் சந்​தித்​தார்​கள். இது​வும் அரசி​யல் வட்​டாரத்​தில் இப்​போது பேசுபொருளாகி இருக்​கிறது.

ஆனால் பசும்​பொன்​னில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய தினகரன், ‘‘சின்​னம்மா எங்​களோடு வந்து இக்​கூட்​டத்​தில் கலந்து கொள்ள முடிய​வில்​லை. அவர்கள் தாமத​மாக புறப்​பட்​ட​தால் அவரால் சரி​யான நேரத்​திற்கு இங்கு வரமுடிய​வில்​லை. அவர்​கள் மனதால் எங்​களு​டன் எப்​போதும் இருப்​பார்​கள். ஏனென்​றால், துரோகம் வீழ்த்​தப்பட வேண்​டும்” என்று சமாளித்​தார்.

சசிகலாவை சந்​திக்​காமல் தவிர்ப்​பது ஏன் என நேற்று மதுரை சோழ​வந்​தானில் தினகரனிடம், செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பிய போது, ‘‘சின்​னம்மா என்​பதை தாண்டி அவர்​கள் எனக்கு சித்​தி. வித்​தி​யாசத்தை புரிந்து கொள்​ளுங்​கள். இப்​படி​யெல்​லாம் கேள்வி கேட்​காதீர்​கள்’’ என்​றார்.

தினகரனும் சசிகலா​வும் பொது​வெளி​யில் சந்​தித்​துப் பேசுவதை தவிர்ப்​பது ஏன் என்​பது அமமுக​வினருக்​கும் புரி​யாத புதி​ராகவே இருக்​கிறது. உள் விவகாரங்​களை அறிந்த அமமுக நிர்​வாகி​களோ, ‘‘சின்​னம்மா சிறை​யில் இருந்த சமயத்​தில் தினகரன் அமமுகவை தொடங்​கிய​தில் இரு​வ​ருக்​குள்​ளும் ஆரம்​பத்​தில் சில வருத்​தங்​கள் இருந்​தன. ஆனால், தற்​போது அதெல்​லாம் சரி​யாகி​விட்​டது. சீக்​கிரமே பொது​வெளி​யில் இரு​வ​ரும் சந்​தித்​துப் பேசுவார்கள்” என்​கிறார்​கள்.