வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா..? வீட்டில் இந்த சிலைகளை வைத்தால் போதுமாம்!

ஒவ்வொருவரும் தங்கள் வீடு செல்வம், மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர். கடின உழைப்பு இருப்பினும் வீட்டில் பணம் நிலைக்காத நிலை ஏற்படலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

செல்வம், சொத்துக்கள் உள்ளவர்களின் வீடுகளில் வாஸ்து விதிகள் சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றன என நம்பப்படுகிறது. வீட்டில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற சில சிலைகளை வைத்திருப்பது உதவும்.

 பசு சிலை: இந்து மதத்தில், காமதேனு பசு அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகக் கருதப்படுகிறது. வீட்டின் வடகிழக்கு மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைத்தால், பணப் பற்றாக்குறை வராது. வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு நிலைத்திருக்கும்.

 தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஆமையை வைத்திருத்தல்: ஆமை விஷ்ணுவின் கூர்ம அவதாரம். வீட்டின் வடக்கு திசையில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஆமையை வைத்திருப்பது செழிப்பை தரும். தண்ணீரில் உலோக ஆமையை வைத்திருப்பது செல்வத்தின் ஆதாரங்களை பலப்படுத்தும்.

 யானை சிலை: வெள்ளி யானையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். யானை விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது என்பதால், அது வாழ்க்கையின் தொல்லைகளை நீக்கி நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

உடைந்த அல்லது சேதமடைந்த சிலைகளை வீட்டில் வைக்கக் கூடாது, அது வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தி வறுமையை கொணரலாம். சிலைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.