அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் ராசிக்காரர்கள் - உங்களுக்கு இன்றைய தினம் எப்படி?

மேஷம்: இன்றைய தினம் இசை, நடனம் மீது ஆர்வம் இருக்கும். இன்று சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புகள் இன்று உங்களை தேடி வரும். கவனமாக செயல்படுவது அவசியம்.
ரிஷபம்: சோம்பலாகவும், பின்வாங்கும் மனநிலையிலும் இருப்பீர்கள். விரும்பிய அனைத்துமே உங்கள் கைகளுக்கு வந்து சேரும். மனதில் உள்ள கவலைகளை சற்று தள்ளி வைத்து வேலையில் கவனம் செலுத்தவும்.
மிதுனம்: உங்கள் அசாதாரண புத்திசாலித்தனம், அபாரமான செயல்திறன் காரணமாக பாராட்டை பெறுவீர்கள். குடும்பம் உங்கள் வெற்றிக்கு அடித்தளம். இனிமையான மாலை காத்திருக்கிறது.
கடகம்: கடினமாக உழைத்து வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான இடத்தை தக்க வைப்பீர்கள். கூட்டாளிகளுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். நெகிழ்வும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிலவும். உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து இன்றைய மாலைப் பொழுதை உல்லாசமாக செலவிடுவீர்கள்.
சிம்மம்: சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைபிடியுங்கள். இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும்.
கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்படும். உங்சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள்.
விருச்சிகம்: நீங்கள் வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் மனோநிலை கொண்ட மக்களை சந்திக்கலாம். அதில் சிலர் உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம். பணியிடத்தில் கவனம் தேவை.
தனுசு: இன்று நீங்கள் பெருமிதப்படுத்தும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளால் நீங்கள் மேற்கோள்ளும் பணி சிறப்பாக இருக்கும். உங்கள் குரலின் மீது நம்பிக்கை வையுங்கள். அது சரியான பாதையில் உங்களை வழிநடத்தும்.
மகரம்: நாள் முழுவதும் வேலை மற்றும் பொறுப்புகளால் மன அழுத்தம் ஏற்படும். போட்டியாளர்களுடன் கடுமையாக சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் சண்டையிட்டு வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு சரியான செயல்களை செய்வீர்கள்.
கும்பம்: உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்வீர்கள். மக்கள் உங்களை அவர்கள் விருப்பப்படி செயல்படுத்த நினைக்கலாம். கவனமாக இருப்பது நல்லது.
மீனம்: உங்களுக்கு செலவுகள் அதிகம் இருந்த போதிலும், தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமித்தல் அவசியமாகும். தக்க தருணத்தில் அந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுத்து உதவலாம்.