யு19 உலகக் கோப்பை.... இந்திய வீரர் சூர்யவன்சி புதிய உலக சாதனை

யு19 உலகக் கோப்பை.... இந்திய வீரர் சூர்யவன்சி புதிய உலக சாதனை

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் வைபவ் சூரியவன்சி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் மொத்தம் 67 பந்துகளில் 72 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ஆரம்பத்தில் 30 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு அரைசதம் அடித்து சூரியவன்சி அசத்தினார். 

சூரியவன்சிக்கு தற்போது 14 வயதும் 296 நாள்களும் ஆகின்றன. ஆதலால் யு-19 உலகக் கோப்பையில் குறைந்த வயதில் 50 ரன்களுக்கும் மேல் குவித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் வீரர் கமால் 15 வயது மற்றும் 19 நாள்களில் 50 ரன்கள் எடுத்ததே குறைந்த வயதில் எடுக்கப்பட்ட அரைசதம் என்று சாதனை படைக்கப்பட்டிருந்தது. அதை சூரியவன்சி முறியடித்தார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 3வது இடத்தில் உள்ளார். அவர் 15 வயது மற்றும் 92 நாள்களில் 2010ம் ஆண்டு அரைசதம் அடித்திருந்தார்.