500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பலி
உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து புறப்பட்டது. அப்போது பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர்.
பிகியாசைன் மலைப்பகுதி சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.