3-ம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு நிரந்தரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு

3-ம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்வோருக்கு நிரந்தரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு

3-ம் உலக நாடு​களில் இருந்து புலம்​பெயர்​வோருக்கு நிரந்​தரத் தடை விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலை​யத்​தில் ஆப்​கானிஸ்​தான் இளைஞர் 2 நாட்​களுக்கு முன்பு நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் ஒரு வீரர் இறந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இதையடுத்து இந்த சம்​பவத்​தில் ஈடு​பட்டு தாக்​குதல் நடத்​தி​ய​வர் மிகப்​பெரிய விலையை தரவேண்டி இருக்​கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரித்​திருந்​தார்.

அது​மட்​டுமல்​லாமல், ஆப்​கானிஸ்​தான் குடிமக்​களின் விசா பரிசீலனையை​யும் அமெரிக்கா உடனடி​யாக நிறுத்​தி​யது. தாக்​குதல் நடத்​திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்​சி​யில் 2021-ம் ஆண்​டில் சரி​யான பரிசோதனை இல்​லாமல் அமெரிக்கா​வுக்​குள் நுழைந்​தவர் என்று ட்ரம்ப் தெரி​வித்​திருந்​தார்.

இதனிடையே அமெரிக்கா​வுக்கு மூன்​றாம் உலக நாடு​களில் இருந்து புலம்​பெயர்​வோருக்கு நிரந்​தரத் தடை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்​துள்​ள​தாக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: முந்​தைய அதிபர் ஜோ பைடன் நிர்​வாகம், லட்​சக்​கணக்​கான மக்​களை அமெரிக்கா​வுக்​குள் அனு​ம​தித்​ததை நான் திரும்​பப் பெற உள்​ளேன். அமெரிக்கா​வுக்கு பயன்​ப​டாதோரும், அமெ ரிக்​காவை நேசிக்க முடி​யாத அனை​வரும் வெளி​யேற்​றப்​படு​வார்​கள். அமெரிக்​கர் அல்​லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளை​யும் நான் நிறுத்​தப்​போகிறேன்.

மூன்​றாம் உலக நாடு​கள் என்று அழைக்​கப்​படும் நாடு​களில் இருந்து அமெரிக்கா​வுக்கு புலம் பெயர விரும்​புவோருக்கு நிரந்​தரத் தடை விதிக்​கப்​படும். சட்​ட​விரோத​மாக குடியேறிய​வர்​கள், அங்​கீகரிக்​கப்​ப​டாத ஒப்​புதல்​கள் மூலம் அமெரிக்​கா​வில் நுழைய இருப்​பவர்​களைத் தடுக்​கவே இந்​தத் தடை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா, அதன் நட்பு நாடு​கள், தொழில்​வளர்ச்சி பெற்ற நாடு​கள் முதல் உலக நாடு​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன. ரஷ்​யா, சீனாவை சார்ந்த நாடு​கள் இரண்​டாம் உலக நாடு​கள் என்று கூறப்​படு​கின்​றன.

இந்த 2 அணி​யிலும் இல்​லாத, வளர்ந்து வரும் அல்​லது பின்​தங்​கிய ஆப்​பிரிக்க, ஆசிய, லத்​தீன் அமெரிக்க நாடு​கள் மூன்​றாம் உலக நாடு​கள் என அழைக்​கப்​படு​கின்​றன.

தற்​போதைய மூன்​றாம் உலக நாடு​கள் பட்​டியலில் ஆப்​கானிஸ்​தான், ஈரான், மியான்​மர், காங்​கோ, கியூ​பா, எரித்​திரி​யா, ஹைதி, வெனிசுலா, சோ​மாலி​யா, சூ​டான் உள்​ளிட்​ட சில ​நாடு​கள்​ இடம்​பெற்​றுள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.