‘ரோஜா மல்லி கனகாம்​பரம்’ படத்துக்கு சிறைச்​சாலை செட்

‘ரோஜா மல்லி கனகாம்​பரம்’ படத்துக்கு சிறைச்​சாலை செட்

‘பு​திய கீதை’, ‘கோடம்​பாக்​கம்’, ‘ராமன் தேடிய சீதை’ உள்​ளிட்ட படங்களை இயக்​கிய கே.பி.ஜெகன், எழுதி இயக்​கும் படம், ‘ரோஜா மல்லி கனகாம்​பரம்’. இதில் இடம்​பெற்​றுள்ள 3 கதைகளில் ஒரு கதை​யின் நாயக​னாக அவர் நடித்​துள்​ளார்.

விஜய் வர்மா இப்​படத்​தில் முன்​னணி நடிகர்​களில் ஒரு​வ​ராக நடிக்கிறார். இவருக்கு ஜோடி​யாக சங்​கீதா கல்யாண் நடித்​துள்​ளார். இவர்​களு​டன் அருள்​தாஸ், கதிர​வன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்​தோஷ், ‘பிச்​சைக்​காரன்’ மூர்த்​தி, தியா என பலர் நடித்​துள்​ளனர். யுனைடெட் ஆர்ட்ஸ் நிறு​வனம் சார்​பில், எஸ்​.கே.செல்​வகு​மார் தயாரிக்​கிறார்.

இப்​படத்​தின் பெரும்​பாலான காட்​சிகள், திருச்​செந்​தூர், தூத்துக்குடி, மணப்​பாடு ஆகிய இடங்​களில் படமாக்​கப்​ பட்​டன. சென்னை ஏ.ஆர்​.எஸ் கார்​டனில் சிறைச்​சாலை செட் அமைத்​து, படத்​தின் முக்​கிய காட்​சிகள் படமாக்​கப்​பட்​டுள்​ளன. இந்நிலையில் இதன் படப்​பிடிப்பு முடிவடைந்​து​ விட்​ட​தாகப் படக்குழு தெரி​வித்​துள்​ளது.