அன்று கமல்ஹாசனுடன் நடித்த சிறுவன்.. இன்று அவரை வைத்து சூப்பர் ஹிட் படம்.. யார் இவர் தெரியுமா?

அன்று கமல்ஹாசனுடன் நடித்த சிறுவன்.. இன்று அவரை வைத்து சூப்பர் ஹிட் படம்.. யார் இவர் தெரியுமா?
அன்று கமல்ஹாசனுடன் நடித்த இந்த சிறுவன், பின்னாளில் கமலை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அஜித்தை வைத்து மிரட்டலான படத்தை இயக்கினார்.
அன்று கமல்ஹாசனுடன் நடித்த சிறுவன், பின்னாளில் அவரை வைத்தே சூப்பர் ஹிட் படம் எடுப்பேன் என நினைத்திருக்கமாட்டார். ஆனால், காலம் அவருக்கான வாய்ப்பை கொடுத்தது. அன்று குழந்தை நட்சத்திரம். இன்று சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநர். கமல்ஹாசன் மட்டுமல்லாமல், அஜித்தை வைத்து யாரும் எதிர்பார்க்காமல் மிரட்டலான கேங்க்ஸ்டர் படத்தையும் இயக்கியுள்ளார். யார் இந்த சிறுவன் என கணிக்க முடிகிறதா?
1983-ம் ஆண்டு கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘சாகர சங்கமம்’ (Sagara Sangamam). இந்தப் படம் தான் தமிழில் ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசன், ஜெயபிரதா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இந்தப் படத்தில் பரதநாட்டிய கலைஞராக இருக்கும் கமல் சிறுவன் ஒருவரை அழைத்து போட்டோ எடுக்க சொல்வார். அந்த சிறுவனும் தப்பு தப்பாக போட்டோ எடுப்பார்.
அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் கடந்த 1985-ம் ஆண்டு பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் தனது உடல் மொழியாலும் நடிப்பாலும் ரசிக்க வைத்திருப்பார். பாக்யராஜிடம், “மை நேம் இஸ் சக்கு” என நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி கலக்கியிருப்பார் அந்த சிறுவன். அவருக்கும் பாக்யராஜுக்கும் இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கும். இப்படி கமல்ஹாசன், பாக்யராஜ் உள்ளிட்டவர்களுடன் நடித்தவர் தான் பின்னாளில் இயக்குநரான சக்ரி டோலெட்டி.
advertisement
அப்போது 3, 4 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் தான் சக்ரி டோலெட்டி. கமல்ஹாசனும் சலங்கை ஒலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சக்ரி டோலெட்டி தான் பின்னாளில் 2009-ம் ஆண்டு வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். 2012-ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘பில்லா 2’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் வசனங்கள் மிரட்டியிருக்கும். படம் பாக்ஸ் ஆஃபீஸில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
அன்று சிறுவனாக நடித்தவர் இயக்குநராக்கி கலக்கினார். சக்ரி டோலெட்டியை பொறுத்தவரை ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஒரு மருத்துவர். ஆனால், இவருக்கு சினிமாவில் ஆர்வம். படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுப்பட்டார். இதனால் கே.பாலசந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுடன் பழக்கத்தில் இருந்தார் சக்ரி டோலெட்டி.
இவர் அமெரிக்காவில் விஎஃப்எக்ஸ் படித்து முடித்து சென்னை வந்து 2008-ம் ஆண்டு வெளியான ‘தசவதாரம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் ரீ - என்ட்ரி கொடுத்தார். அடுத்த ஆண்டே கமல்ஹாசனை வைத்து ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இயக்கினார். இது இந்தியில் வெளியான ‘வெட்னஸ்டே’ படத்தின் ரீமேக். அடுத்து ‘ஈ நாடு’ படத்தை தெலுங்கில் இயக்கினார்.
கமலை வைத்து ‘உன்னைப்போல் ஒருவன்’, அஜித்தை வைத்து ‘பில்லா 2’, சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘வெல்கம் டூ நியூயார்க்’, ‘படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி. கடைசியாக 2019-ம் ஆண்டு நயன்தாராவை வைத்து ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்களை இயக்கவில்லை. தற்போது அவர், care.ai என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவை கொண்டு இயக்கும் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்து வருகிறார். மீண்டும் திரைத்துறைக்கு திரும்புவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.