காங்கிரஸின் கூட்டணி ஆட்சி பேச்சு: முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி

காங்கிரஸின் கூட்டணி ஆட்சி பேச்சு: முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திமுகவை பொறுத்தவரை எப்பொழுதும் இருந்தது கிடையாது என என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி 44வது வார்டில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களின் உரிமை. திமுகவை பொறுத்தவரை அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்போதும் இருந்ததில்லை. திமுக தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்" என்றார்.

சென்சார் போர்டு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது, முதல்வர் குற்றச்சாட்டு உண்மையானது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.