முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? தென்னாப்பிரிக்காவுடன் நாளை மோதல்!
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரில் முன்னிலைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இப்போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து தொடரை வெல்லுமா? அல்லது முந்தைய தோல்விகளுக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி, முதல் டெஸ்டில் படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அவருது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வியும் உள்ளது.
ஏனெனில் ஏற்கெனவே அணியில் 6 இடதுகை பேட்டர்கள் உள்ள நிலையில், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது நிதிஷ் ரெட்டி லெவனில் இடம் பிடிப்பாரா என்ற கேள்விகள் அதிரித்துள்ளன. இதனால் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இருப்பினும் சிமோன் ஹார்மர், கேசவ் மஹாராஜ் ஆகியோருடன் மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி, கார்பின் போஷும் இருப்பது எதிரணிக்கு நிச்சயம் சோதனையைக் கொடுக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் தென்னாப்பிரிக்க அணி இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 45 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்க அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதேசமயம் இந்திய அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 10 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
பர்சபாரா கிரிக்கெட் மைதானம்
காபா கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனால் மைதானத்தின் தரவுகள் குறித்த எந்த தகவல்களும் இல்லை. ஆகையால், இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பாரக்க வேண்டும்.
நேரலை தகவல்கள்
இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியைக் காண முடியும். போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு 8.30 மணிக்கு நடைபெறும்.
உத்தேச லெவன்
இந்தியா உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன்/தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த்(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்கா உத்தேச லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா(கேப்டன்), டோனி டி ஜோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்/டெவால்ட் பிரெவிஸ், கைல் வெர்ரைன், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ்/லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ்