JUST NOW: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் வலுகுறைந்த போதிலும், வட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும்.