BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை (நவ.29) பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் நாள்களில் கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய  4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.