‘பராசக்தி’ படம் எப்படி இருக்கு ? -சிவகார்த்திகேயன் விளக்கம்
மறுதணிக்கைக் குழு கொடுத்திருக்கிற ‘கட்’களுடன் இன்று வெளியாகிறது, சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இதில் ரவி மோகன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா முரளி என பலர் நடித்துள்ள இந்த ‘பராசக்தி’ இந்தி திணிப்புக்கு எதிராக 60-களில் தமிழகத்தில் நடந்த மாணவர்களின் மொழிப் போர் கதையை பேசுகிறது.
இந்தி திணிப்புக்கு எதிரா போராட்டம் நடந்த காலகட்டத்துல நிகழ்ந்த சில உண்மைச் சம்பவங்களை மையமா வச்சு உருவாக்கப்பட்ட கற்பனை கதைதான் படம். அண்ணன் - தம்பி, அவங்க வீட்டுக்கு எதிர்ல வசிக்கிற ஒரு பொண்ணு, எல்லோரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்றாங்க. அந்த போராட்டம், இவங்க வாழ்க்கையில என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துச்சு, என்ன நடந்ததுங்கறதுதான் கதை. கமர்சியல் கதைதான்.
இந்த கதையில் நிறைய கட் ஆனதா என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்தார். அதில் அவர், கன்னா பின்னானு கட் ஆகலை. சில இடங்கள்ல கட் இருக்கு. முடிஞ்ச அளவுக்கு கதையோட தொடர்ச்சி மிஸ் ஆகாம இருக்கறதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணியிருக்காங்க. ‘ரிவைசிங் கமிட்டி’ சில காட்சிகளை நீக்கவும் சில வசனங்களை மவுனமாக்கறதுக்கும் சொன்னதுக்குப் பிறகு 10 மணிநேரத்துக்குள்ள எங்க டீம் பரபரப்பா பண்ணிக் கொடுத்துட்டாங்க.
அதனால முக்கியமான ‘எமோஷன்’ எங்கேயும் மிஸ் ஆகாது. இந்தக் கதையோட முக்கியமான உணர்வு எல்லோருக்குள்ளயும் இருக்கிறதுதான். நம்ம மொழி அப்படின்னு வரும்போது, அதுக்கு நான் ‘எக்ஸ்ட்ரா’ வசனம் பேசினாதான் அந்த உணர்வு வரும் அப்படிங்கறது இல்ல. கதை நடக்கும் போதே, அதை ஒரு முறை சொல்லும்போதே, வந்திரும்னு நினைக்கிறேன். அதனால கதைக்கு எந்த பாதிப்பும் இல்ல என்று கூறியிருக்கிறார்.