கரூர் துயரம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் 16-ம் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் 16-ம் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சென்னையில் த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெளியே நுழைவு வாசல் பகுதியில், அக்கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.அதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளன.
அதன் கீழே உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம் என்ற வரிகள் எழுதப்பட்டு உள்ளன.பலியானவர்களின் பெயர்களுடன் மெழுகுவர்த்தி எரிவது போன்றும், புகைப்படம் இல்லாதவர்களின் இடங்களில் பூக்குடையும் இடம் பெற்று உள்ளன. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.