இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடரை நியூஸிலாந்து அணி முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டி20 மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலில் நடை​பெற்ற டி20 தொடரை 1-0 என இங்​கிலாந்து கைப்​பற்​றியது.

இதையடுத்​து, நடை​பெற்ற ஒரு​நாள் தொடரில் முதல் 2 போட்​டிகளின் முடி​வில் 2-0 என நியூஸிலாந்து தொடரை கைப்​பற்றி விட்​டது. இந்​நிலை​யில் இரு அணி​களுக்​கும் இடையி​லான 3-வது ஒரு​நாள் போட்டி நேற்று வெலிங்​டனில் நடை​பெற்​றது.இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் பந்​து​வீச்சை தேர்வு செய்​தார்.

இங்​கிலாந்து அணி​யில் முதல் 4 வீரர்​களான ஜேமி ஸ்மித் 5, டக்​கெட் 8, ரூட் 2, ஹாரி புரூக் 6 ரன்​கள் எடுத்து வீழ்ந்​தனர்​. ஜேமி ஓவர்​டன் சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடி 68 ரன்​கள் சேர்த்​தார். மற்ற வீரர்​கள் சொற்ப ரன்​களில் வீழ்ந்​தனர். இதனால் இங்​கிலாந்து அணி 40.2 ஓவர்​களில் 222 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.நியூஸிலாந்து தரப்​பில் டிக்​னர் 4 விக்​கெட்​டும் ஜேக்​கப் டஃபி 3 விக்​கெட்​டும் வீழ்த்​தினர்.

இதைத் தொடர்ந்து 223 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய நியூஸிலாந்​து, 44.4 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 226 ரன்​கள் சேர்த்து வெற்றி கண்​டது. டேவன் கான்வே 34, ரச்​சின் ரவீந்​திரா 46, வில் யங் 1, டேரில் மிட்​செல் 44, டாம் லேதம் 10, மைக்​கேல் பிரேஸ்​வெல் 13, மிட்​செல் சாண்ட்​னர் 27, நேதன் ஸ்மித் 2 ரன்​கள் எடுத்​தனர்.

ஆட்டநாயகன்: கடைசி நேரத்​தில் ஜகாரி பவுல்க்ஸ் 14 ரன்​களும், பிளேர் டிக்​னர் 18 ரன்​களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இதையடுத்து 2 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக பிளேர் டிக்னரும், தொடர்நாயகனாக டேரில் மிட்செலும் தேர்வு செய்யப்பட்டனர்.