Car CST | GST குறைப்புக்கு பின் அலை அலையாய் படையெடுக்கும் கூட்டம் -எந்த கார்களுக்கு மவுசு தெரியுமா?

Car CST | GST குறைப்புக்கு பின் அலை அலையாய் படையெடுக்கும் கூட்டம் -எந்த கார்களுக்கு மவுசு தெரியுமா?

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு வரி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில் வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.மாருதி சுசுகி கார்கள் 1 லட்சத்த 50 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் முன்பதிவுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நவராத்திரியின் முதல் 8 நாட்களில் மாருதி சுசுகி நிறுவனம்,1.65 லட்சம் கார்கள் டெலிவிரி செய்துள்ளது மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐம்பதாயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது மேலும், ஜிஎஸ்டி மறுசீரமைப்பு காரணமாக, மின்னணு சாதனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது ஹையர் நிறுவனத்தின் விற்பனை 85 சதவீதம் உயர்ந்து, 2.5 லட்சம் மேல் விலை கொண்ட டிவிகள் 90 சதவீதத்திற்கு மேல் விற்று தீர்ந்துள்ளன.இதே போன்று, எல்ஜி நிறுவனத்தின் விற்பனை உயர்ந்துள்ளதாகவும், ஜிஎஸ்டி மறுசீரமைப்பு காரணமாக 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விற்பனை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.