மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

மொ​சாம்​பிக் நாட்​டில் படகு கவிழ்ந்து 3 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர்.

கிழக்கு ஆப்​பிரிக்க நாடு​களுள் ஒன்று மொசாம்​பிக். இங்கு ஏராள​மான இந்​தி​யர்​கள் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மொசாம்​பிக் நாட்​டின் மத்​திய பகு​தி​யிலுள்ள பெய்ரா துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் காலை ஒரு படகு புறப்​பட்​டது.

துறை​முகப் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த கப்​பலுக்கு ஆட்​களை ஏற்​றிச் செல்ல அந்த படகு சென்​றது. செல்​லும் வழி​யில் அந்​தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்​தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்​கினர். இந்த விபத்​தில் 3 இந்தியர்கள் உயி​ரிழந்​தனர்.

கடலில் விழுந்த 6 பேர் மீட்​கப்பட்டனர். இதில் ஒரு​வர் சிகிச்சை பெற்று வரு​கிறார். மொசாம்​பிக்​கில் உள்ள இந்​தி​யத் தூதரகம் இந்​தத் தகவலை உறு​தி செய்​துள்​ளது.