ம.பி.யில் யாசகருக்கு 3 வீடுகள், 3 ஆட்டோ, மாருதி டிசையர் கார் - வட்டிக்கு விட்டு சம்பாதித்தது அம்பலம்

ம.பி.யில் யாசகருக்கு 3 வீடுகள், 3 ஆட்டோ, மாருதி டிசையர் கார் - வட்டிக்கு விட்டு சம்பாதித்தது அம்பலம்

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரை யாசகர்​கள் இல்​லாத நகர​மாக மாற்ற அம்​மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​காக பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்​டுத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

இந்த சோதனை​யில் சுமார் 6,500 யாசகர்​கள் அடை​யாளம் காணப்பட்​டனர். அவர்​களில் 4,500 பேர் ஆலோ​சனைக்​குப் பிறகு யாசகம் எடுப்​ப​தைக் கைவிட்​டுள்​ளனர், 1,600 பேர் மறு​வாழ்வு மையங்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர், மேலும் 172 குழந்​தைகள் பள்​ளி​களில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், தொழுநோ​யால் பாதிக்​கப்​பட்ட ஒரு​வர் தொடர்ந்து யாசகம் எடுப்​ப​தாகக் கிடைத்த தகவலின் பேரில், மீட்​புக் குழுவினர் மங்​கிலால் என்​பவரைப் பிடித்து விசா​ரித்​தனர். இதில் திடுக்​கிடும் பல தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஆனால் யாசகம் எடுத்த பணத்தை அவர் வியா​பாரி​களுக்கு வட்டிக்​குக் கடன் கொடுத்​துள்​ளார். மாலை நேரங்​களில் அவரே நேரில் சென்று வட்​டியை வசூலித்​துள்​ளார். அவர் சுமார் 4- 5 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்​திருக்​கலாம் என்​றும், வட்டியுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வரு​மானம் ஈட்​டிய​தாக​வும் அதி​காரி​கள் மதிப்​பிடு​கின்​றனர்.

இதுகு றித்து பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்​டுத் துறை அதி​காரி தினேஷ் மிஸ்ரா கூறும்​போது, “மங்​கிலால் தற்​போது உஜ்ஜைனி​யில் உள்ள சேவா தாம் ஆசிரமத்​துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் சொத்துகள் குறித்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது. அவரிடம் கடன் வாங்​கிய வி​யா​பாரி​களிட​மும்​ வி​சா​ரணை நடத்தப்​படும்​” என்​றார்​.