'லோகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

'லோகா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'லோகா'.

இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது.
உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூலாகி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்படும் 'லோகா' ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 23-ந்தேதி லோகா படம் வெளியாகும் என கூறப்படுகிறது.