வளை​குடா நாடு​களில் ‘பார்​டர் 2’ படத்துக்கு தடை

வளை​குடா நாடு​களில் ‘பார்​டர் 2’ படத்துக்கு தடை

பாலிவுட் இயக்​குநர் ஜே.பி.தத்தா இயக்​கத்​தில் 1997-ம் ஆண்டு வெளி​யான இந்தி திரைப்​படம் ‘பார்​டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்​தி​யா- பாகிஸ்​தான் போர் பின்னணியில் உரு​வான திரைப்​படம் இது. இதில் சன்னி தியோல், சுனில் ஷெட்​டி, ஜாக்கி ஷெராப் உள்​ளிட்​டோர் நடித்​திருந்​தனர். இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது. இப்​படத்​தின் 2-ம் பாகம் இப்​போது உரு​வாகி இருக்​கிறது. இதை அனு​ராக் சிங் இயக்​கி​யுள்​ளார். முதல் பாகத்​தில் நடித்​திருந்த சன்னி தியோல் இதி​லும் நடித்​துள்​ளார்.

வருண் தவண், தில்​ஜித் தோசாஞ், அஹான் ஷெட்​டி உள்பட பலர் நடித்​துள்​ளனர். அதிக எதிர்​பார்ப்​பைக் கொண்ட இப்படம் நேற்று வெளி​யானது. இந்​நிலை​யில் ‘துரந்​தர்’ படத்தைப் போல ‘பார்​டர் 2’ படமும் வளை​குடா நாடு​களில் வெளி​யாக​வில்​லை. பாகிஸ்​தானுக்கு எதி​ராக இப்படத்தின் கதை இருப்​ப​தாகக் கூறி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்​தார், சவுதி அரேபியா மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்​கப்​பட்​டு உள்ளது.